இலங்கை வரலாற்றிலேயே தவிர்க்க முடியாத கட்சியாக உள்ள பொதுஜன பெரமுன உட்கட்சி பூசலால் சிதறுமா?

#SriLanka #Mahinda Rajapaksa #Gotabaya Rajapaksa #Basil Rajapaksa #Ranil wickremesinghe #Lanka4 #srilankan politics #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
10 months ago
இலங்கை வரலாற்றிலேயே தவிர்க்க முடியாத கட்சியாக உள்ள பொதுஜன பெரமுன உட்கட்சி பூசலால் சிதறுமா?

மாபெரும் அரசியல் கூட்டணியாக காணப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்தி, இலங்கை வரலாற்றிலேயே அதிகப்படியான வாக்குளைப் பெற்றதோடு, அடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் 145 ஆசனங்களை தனதாக்கி மாபெரும் வெற்றி என்ற வரலாற்றைப் படைத்தது.

அதனடிப்படையில், எதிர்வரும் எந்த தேர்தலாயினும் பொதுஜன பெரமுன மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் நாடு முழுவதும் 2500 அரசியல் கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.

இலங்கை தேசிய முன்னணி, நமது இலங்கை சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் ஆரம்பத்தில் சிறிய கட்சிகளாக இருந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு கூட்டணி அமைத்து இலங்கை பொதுஜன முன்னணி என்ற பெயரில் இணைந்தன.

images/content-image/1705751299.jpg

இக்கூட்டணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்சவிற்கு ஆதரவான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சில உறுப்பினர்களும் இணைந்தனர்.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் கூட்டணியை அமைப்பது, ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்வது, பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது என பல்வேறு நெருக்கடிகள் எழுந்துள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நியமிக்க வேண்டுமென கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரும் முக்கிய அமைச்சர்கள் சிலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அத்துடன், அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, மஹிந்த அமரவீர உட்பட சில அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவான நிலைபாட்டில் உள்ளனர். வேட்பாளரை இறுதிப்படுத்த முடியாதுள்ளமையால் கூட்டணியை வலுப்படுத்தல் மற்றும் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியாத நிலையில் பொதுஜன பெரமுன உள்ளது.

images/content-image/1705751362.jpg

இதேவேளை ஆளுங்கட்சியான பொதுஜன பெரமனவுக்குள் அண்மைக்காலமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில், தற்போது பிரதமர் பதவியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென கட்சியில் ஒரு தரப்பு போர்க்கொடி உயர்த்தியுள்ளது. 

இவ்வாறான குழப்ப நிலையில், தம்மிக்க பெரேரா தற்காலிகமாக ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பசில் ராஜபக்ச உட்பட 6 பேரின் பெயர்கள் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பெயர் பட்டியலில் உள்ளது. 

ஆனால், பசில் ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டுமென சிலர் அழுத்தம் கொடுத்து வருவதுடன், அதற்கான யோசனையையும் கட்சியின் உயர்பீடத்தில் சமர்ப்பிக்க தயாராகி வருகின்றனர்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் வலுவான கூட்டணியை அமைக்கவும் பொதுஜன பெரமுனவின் வாக்குகளை அதிகரித்துக்கொள்ளவும் பசில் ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டுமென சிலர் கருதுவதுடன், அதற்கான அழுத்தங்களையும் கட்சியின் உள்மட்டத்தில் கொடுத்துள்ளனர் என உள்ளகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!