முத்துப்பேட்டை மீன் மார்கெட்டில் ரூ. 17,210க்கு விலைபோன அரிய வகை மீன்

#India
Lanka4
10 months ago
முத்துப்பேட்டை மீன் மார்கெட்டில் ரூ. 17,210க்கு விலைபோன அரிய வகை மீன்

மருத்துவகுணம் கொண்ட மீனை ஏலம் எடுக்க போட்டோபோட்டி.. வீடியோ வைரல். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தொகுதி கடல் சார்ந்த பகுதி என்பதால் இப்பகுதியில் உள்ள ஆசாத்நகர் மற்றும் பெரியக்கடைத்தெரு மீன் மார்க்கெட்களுக்கு பல்வேறு வகை மீன் வகைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுக்கப்பட்டிருக்கும் இதில் குறிப்பாக இப்பகுதியில் உள்ள அலையாத்திகாடு வேர்களில் உற்பத்தியாகி வளரக்கூடிய மீன் வகைகள் அதிக ருசி கொண்டதாகும் அதனால் அதிக அளவில் இப்பகுதியில் உற்பத்தியாகும் கொடுவா கெண்டை மீன், வெள்ளாம் பொடி மீன், கத்தாழை போன்ற மீன்கள் இப்பகுதியில் உள்ள பெரியக்கடை தெரு மற்றும் ஆசாத்நகர் மீன் மார்கெட் பகுதியில் அதிக அளவில் விற்பனைக்கு காணப்படுவது வழக்கம் மற்ற வகை மீன்கள் அருகில் உள்ள நாகப்பட்டினம், கோடியக்கரை, மல்லிபட்டினம் போன்ற பகுதியில் இருந்து இங்கே விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. 

இந்த நிலையில் முத்துப்பேட்டை அலையாத்திகாடு நிறைந்த லகூன் பகுதியிலிருந்து சிக்கும் அதிக மருத்துவ குணம் கொண்ட கத்தாழை மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. ஒருகிலோ 400ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஆண் கத்தாழை மீனில் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் விலை உயர்ந்த நெட்டி இருக்கும் என்பதால் ஆண் மீன்களை மார்க்கெட்டுக்கு ஏலத்திற்கு கொண்டு வரும்போது வியாபாரிகள் அதிகளவில் போட்டிபோட்டுக்கொண்டு அதிக விலைக்கு ஏலம் எடுப்பார்கள் இதில் சில மாதங்களுக்கு முன்பு சுமார் கிலோ 10எடைக்கொண்ட மூன்று கத்தாழை மீன்கள் 48,900க்கு விலைபோனது. இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை மிஞ்சும் வகையில் நேற்று ஆசாத்நகர் மீன் மார்கெட்டுக்கு மீனவர் ஒருவர் வலையில் சிக்கிய சுமார் 3கிலோ எடை கொண்ட ஒரு கத்தாழை மீனை கொண்டு வந்து ஏலத்திற்கு வைத்திருந்தார். அப்போது ஏலம் விடும் நபர் தொடக்கத்திலில் 5ஆயிரம் ரூபாயில் தொடங்கினார். 

அப்போது வியாபாரிகள் ஏலம் எடுக்க போட்டோபோட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டனர். இதில் கடைசியில் அந்த கத்தாழை மீன் ஒன்று ரூபாய் 17,610க்கு விலைபோனது. இதனை மீன் வாங்க வந்த மக்கள் வேடிக்கையுடன் பார்த்தனர். இந்தநிலையில் இந்த கத்தாழை மீன் ஏலம் விடும்போது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியது இதனை மீனவர்கள் அந்த சிசிடிவி வீடியோ காட்சியை வெளியிட்டதால் இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!