அன்றும், இன்றும், என்றும் டி.எம்.சௌந்திரராஜன்!
கதாநாயகர்களுக்கு ஏற்ப குரலை மாற்றும் டி.எம்.எஸ். 65 ஆண்டுகள் அவர் திரையுலகில் தன்னுடைய இசை பயணத்தைத் தொடர்ந்து வந்தவர்.
தன்னுடைய தனித்துவமான இசைப் பயணத்தில், இவர் செய்த சாதனைக்காக பேரவைச் செம்மல், கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான விருதுகள் இவருக்குக் கிடைத்துள்ளன.
இது தவிர கலா ரத்னம், கான ரத்னம், அருள் இசை சித்தர், நவரச பவ நளின கான வர்ஷினி, ஞானாமிர்த வர்ஷினி, சாதனை சக்கரவர்த்தி, பாரதிய இசை மேகம், கான குரலோன் போன்ற பட்டங்களும் அவருக்கு ரசிகர்களால் சூட்டப்பட்டது.
டி.எம்.சௌந்திர ராஜனின் இசைப் பயணத்தில் கவிஞர் கண்ணதாசனின் பங்கும் மிகப்பெரிய அளவில் இருந்தது.
24 வயதில் திரையுலகில் பாடத்துவங்கிய இவர், தன்னுடைய 88வது வயது வரை பாடி வந்தார்.
ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான ’செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடலில், மற்ற இளம் பாடகர்களுடன் இணைந்து டி.எம்.எஸ் பாடியிருந்தார். அதுவே அவர் பாடிய கடைசி பாடலாகும்.