விவசாயிகளுடன் கலந்துரையாட ரோன் செல்லும் பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அத்தால்

#PrimeMinister #France #லங்கா4 #Visit #பிரான்ஸ் #discussion #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 france tamil news
Mugunthan Mugunthan
11 months ago
விவசாயிகளுடன் கலந்துரையாட ரோன் செல்லும் பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அத்தால்

பிரதமர் கேப்ரியல் அத்தால் இன்று சனிக்கிழமை Rhône நகருக்கு பயணமாகிறார். அங்கு 150 வரையான விவசாயிகளை சந்திக்கிறார். 

 அங்குள்ள 2,400 பேர் வசிக்கும் சிறிய கிராமமான Orliénas இற்கு பயணமாகி, அங்கு வைத்தே விவசாயிகளைச் சந்திக்கிறார். அங்கு காய்கறி பழங்கள் மற்றும் கால்நடை விவசாயிகள் கடந்த சில மாதங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

images/content-image/1705760152.jpg

 அவர்களைச் சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து கலந்துரையாட உள்ளார். அதைத் தொடர்ந்து, உள்ளூர் அரசியல் தலைவர்களைச் சந்தித்து அவர்களுடன் உணவு அருந்துவார் எனவும் அறிய முடிகிறது. விவசாய உற்பத்தி பொருட்களின் விலை சந்தைகளில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்,

 சரியான விலை நிர்ணயிக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்து விவசாயிகள் சாலை மறியல் உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!