இணையத்தில் வைரலாகி வரும் satellite இல் இருந்து எடுக்கப்பட்ட இராமர் கோவில் புகைப்படங்கள்!
satellite இல் இருந்து பார்த்தால் அயோத்தி ராமர் கோயில் எப்படி இருக்கும் என்பது குறித்த போட்டோவை இஸ்ரோ தனது இணையத்தளத்தில் பகிர்ந்துள்ளது.
இந்த போட்டோவை எடுத்தது முற்றிலுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சாட்டிலைட் என்பதும் மற்றொரு சிறப்பாகும்.
சட்லயிட் படங்கள் விண்வெளியில் இருந்து பார்க்கும் போது ராமர் கோயில் மிகவும் அற்புதமாக இருப்பதாக பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
2.7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ராமர் கோயில் தளத்தை முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்திய ரிமோட் சென்சிங் சட்லயிட் விண்வெளியில் இருந்து போட்டோ எடுத்துள்ளது.
கடந்த டிசம்பர் 16ஆம் திகதி எடுக்கப்பட்ட போட்டோக்களையே இப்போது இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அப்போது அந்தப் பகுதியில் கடுமையான பனி மூட்டம் நிலவிய நிலையில், தெளிவான காட்சி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சட்லைட் போட்டோவில் தஷ்ரத் மஹால் மற்றும் சரயு நதி ஆகியவை தெளிவாக்கத் தெரிகின்றன. மேலும், புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையமும் இந்த சட்லைட் படத்தில் தெரிகிறது.
இந்த படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. சாட்டிலைட்டில் உள்ள ராமர் கோயில் படத்தை இணையத்தில் பரப்பும் நெட்டிசன்கள், பக்தர்கள் அதன் பிரம்மாண்டத்தை புகழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.