மோடியை இராவணனுடன் ஒப்பிட்டு பேசிய சுப்பிரமணியன் சுவாமி : வெடித்த சர்ச்சை!
#India
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#lanka4Media
#lanka4_news
Dhushanthini K
1 year ago

ராமர் கோவில் கும்பாவிசேட நிகழ்வை முன்னிட்டு மோடி அரசு முழு மூச்சாக ஈடுபட்டிருக்கும் வேளையில் சர்ச்சை மன்னன் சுப்பிரமணியன் சாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது குறித்த பதிவில், ‛‛மோடி ஏன் இன்னும் ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிப்பதில் தாமதம் செய்து வருகிறார்? காரணம் மோடியும், இராவணன் போன்றவர் தான்.
மோடி இந்து கடவுள்கள் முன்பு தரிசனம் செய்வார் ஆனால் அவரது செயல் என்பது அசூரன் போன்று இருக்கும்'' என விமர்சனம் செய்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



