அயோத்தி ராமர் கோவில் பல்லாண்டு காலம் நிலைத்து மக்களுக்கு அருள்புரிய வேண்டும்.

#Temple #spiritual #Article #Lanka4 #anjaneyar #Reopen #lanka4Media #lanka4_news #lanka4.com
Mugunthan Mugunthan
9 months ago
அயோத்தி ராமர் கோவில் பல்லாண்டு காலம் நிலைத்து மக்களுக்கு அருள்புரிய வேண்டும்.

அயோத்தியில் இராமர் கோவிலும் பிரதிஷ்டை பூஜை செய்து திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. இந்த கோவில் கருவறையில் இருக்கும் பாலராமருக்கான முதல் பூஜையை பாரதப்பிரதமர் செய்து தொடக்கி வைத்தார்.

இந்தக் கோவில் பிணக்கானது சுமார் 500 ஆண்டுகளாக நிலவி வந்த நிலையில் உயர் நீதிமன்றம் இதற்கான தீர்பை வழங்கி கோவில் தற்போது பல பிரமுகர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டுவிட்டது.

ஆனால் இத்துடன் முடிவு என்று நாம் ஆறுதல் அடையும் வேளையில் பள்ளிக்காலத்தில் இராமாயணத்தில் நான் படித்த இராம - இராவண புராணம் ஞாபகத்திற்கு வந்தது.

இங்கு இராமர் இராவணனை அழித்து எல்லாம் முடிந்ததாக நினைத்து இருக்கையில், நாரதர் அவரை பார்த்து இராவணன் அழிந்தது உண்மைதான், ஆனால் அவனுடைய இரண்டு புத்திரர்கள் உயிருடன் இன்னும் உள்ளனர்.

இலங்கை யுத்தத்திற்கு பழிக்குப்பழி வாங்க துடித்துக்கொண்டிருக்கிறரார்கள். இரக்த பிந்து, இரக்த ராட்சகன என்ற அந்த இரண்டு அரக்கர்களும் கடலுக்கடியில் உன்னை வெல்ல கடும் தவம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் அந்தத் தவம் முடிந்தால் சக்தி வாய்ந்த வரங்களை பெற்றுவிடுவார்கள். அதனால் உலகிற்கு பெருமழிவு உண்டாகும். ஆகையால் நீ அவர்களை சம்ஹாரம் செய் என்றார்.

இராமரோ நாரதா நான் அயோத்தி அவசரமாக சென்று கொண்டிருக்கிறேன். அங்கு செல்லாவிட்டால் தம்பி பரதன் தீக்குளித்துவிடுவான். என்ன செய்வேன் என்றார்.

images/content-image/1705928983.jpg

அதற்கு நாரதரும் லட்சுமணனை கேட்க, அதற்கு இராமர் தான் லட்சுமணனிடம் கொடுத்த சத்தியமான பிரியமாட்டேன் என்றதைக் கூற, அவர் கண்ணில் அனுமன் படுகிறார்.

இராமர் அனுமனை உடனே அழைத்து அசுரர்களின் சம்ஹாரம் உன்னால் ஆகட்டும். என ஆசி வழங்கினார். அதற்கு எல்லாக்கடவுளும் தேவர்களும் அனுமன் ஜெகிக்க ஆசி வழங்கினர்.

மகா விஷ்ணு வெற்றி உண்டாகட்டும் என்று தனது சங்கு சக்கரத்தினையும், சிவன் தனது நெற்றிக்கண்ணையும், பிரம்மா கபாலத்தினையும் மற்றும் அனைத்து கடவுளும் தத்தமது ஆயுதங்களை வழங்கி ஆசிர்வதித்தனா்.

இவற்றுடன் அனுமன் தந்த காட்சியோ 10 கரம் கொண்ட ஆஞ்சநேயர் காட்சியாகும். கருடபகவான் அசுரர்களை சென்று மாய்த்திட தனது சிறகுகளை வழங்கினார். இவ்வாறு 3 கண்கள் 10 கரம் கொண்ட ஆயுதம் சகிதம் அசுரர்களை சம்ஹாரம் செய்தார் ஆஞ்சநேயர்.

ஈற்றில் போரில் வெற்றிபெற்ற ஆஞ்சநேயர் ஒரு கிராமத்தில் களைப்பாறி இராமரை அடையவிருந்தார். இவ்வாறு அவர் ஆனந்தப்பட்ட  அந்த இடம் இன்னும் அனந்த மங்கலம் என தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.

இந்தக்  கதையின் மூலம் நான் நினைப்பது யாதெனில் இந்த அயோத்தி இராமர் கோவிலானது பல்லாண்டு காலம் பிணக்குகள் தோன்றாது இருக்க ஆஞ்சநேயர் காவல் காப்பாரா என்று.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!