வழியில் கிடந்த பணத்தை எடுத்த கனேடிய மாது அதனை உரியவரிடம் ஒப்படைத்த விதம்

#Canada #Road #பணம் #லங்கா4 #money #Return #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 canada tamil news
வழியில் கிடந்த பணத்தை எடுத்த கனேடிய மாது அதனை உரியவரிடம் ஒப்படைத்த விதம்

கனேடிய பெண் ஒருவர் நடந்துசெல்லும்போது, வழியில் ஒரு கவர் கிடப்பதை கவனித்துள்ளார். அதை அவர் எடுத்துப் பார்க்க, அதில் பெரும் தொகையிலான பணம் இருப்பதை அவர் கண்டுள்ளார். கவரில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் கடந்த வாரம், வான்கூவரைச் சேர்ந்த Talia Ball, கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, வழியில், பனியில், கவர் ஒன்று கிடப்பதைக் கவனித்துள்ளார்.

 அவர் அதை எடுத்துப் பார்க்க, அந்த கவரில் பெரும் தொகையிலான பணம் இருந்துள்ளது. மேலும், அந்தக் கவரில் ’குழந்தைகளுக்காக’ என எழுதப்பட்டுள்ளதைக் கவனித்த Talia, அது யாரோ ஒரு குடும்பத்தினருடையது என்பதையும், அவர்கள் அந்தக் கவரை தவறவிட்டிருக்கலாம் என்பதையும் புரிந்துகொண்டு, உடனடியாக, சமூக ஊடகங்களில் தான் ஒரு கவரைக் கண்டெடுத்ததையும், அதில் பணம் இருந்ததையும் குறித்து விவரமாக குறிப்பிட்டு, பணத்தின் உரிமையாளர் தக்க ஆதாரங்களுடன் வந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பணத்தை இழந்த நபரின் நண்பர் ஒருவர் இந்த விடயத்தை அறிந்து, அந்த நபரை Taliaவிடம் அறிமுகம் செய்துள்ளார். பணத்தை இழந்து கவலையடைந்திருந்த அந்தக் குடும்பம், பணம் திரும்பக் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளது.

 பணத்தைத் தவறவிட்ட அந்த நபரின் மனைவி, தாங்கள் தவறவிட்ட பணத்தைக் கண்டெடுத்த பெண் அதைத் திருப்பிக் கொடுக்க முன்வந்ததை அறிந்ததும் ஓவென கண்ணீர் விட்டு அழுதாராம். அந்தக் குடும்பத்தினர் Taliaவின் நேர்மையைப் பாராட்டி அவருக்கு 50 டொலர்களை பரிசாக வழங்கியுள்ளார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!