அயோத்தி சென்ற ரஜனியின் கருத்தில் ஒரு கேள்வியுள்ளதாக இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்
“மதசார்பின்மையை கொண்ட இந்தியா எதை நோக்கி நகர்கிறது என்ற கேள்வியை நாம் கேட்கவேண்டியுள்ளது” என்ற இயக்குநர் பா.ரஞ்சித், “அயோத்தி சென்ற ரஜினி கூறிய பின்னால் இருக்கும் அரசியலை நாம் கேள்வி கேட்க வேண்டியுள்ளது” என்று கூறினார்.
இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “நான் படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எல்லோரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். படத்தின் வசனங்கள் நன்றாக உள்ளது.
பலருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். நடிகர்களும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தின் இயக்குநர் ஜெய்யும், நானும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். ஜெய் தொடக்கத்தில் அனிமேஷன் படம் இயக்கப்போவதாக சொன்னார். பின்னர் ‘காலா’ படத்தில் உதவி இயக்குநராக ஜெய் பணியாற்றினார்.
நண்பன் உதவி இயக்குநராக இருந்தது சங்கடமாக இருந்தது. 2 படங்கள் உதவி இயக்குநராக பணியாற்றிய பின் இப்போது படம் இயக்கியிருக்கிறார். சமூகத்தின் மீது மிகவும் அக்கறை கொண்ட மனிதர் ஜெய். ‘நீ படம் எடு. நான் தயாரிக்கிறேன்’ என சொன்னேன். அதன்பிறகு தான் இந்தப் படத்தை தொடங்கினோம்” என்றார்.