தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை வழங்குமாறு வலியுறுத்த மட்டுமே முடியும்: தமிழ்க் கட்சிகளிடம் இந்திய தூதுவர்!

#India #SriLanka #Election #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Ambassador #lanka4Media
Thamilini
2 years ago
தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை வழங்குமாறு வலியுறுத்த மட்டுமே முடியும்:  தமிழ்க்  கட்சிகளிடம்  இந்திய தூதுவர்!

இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்குமாறு இலங்கை அரசை வலியுறுத்த மட்டுமே முடியுமென்று இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ததெரிவித்துள்ளார். 

கொழும்பில் உள்ள இந்தியன் இல்லத்தில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை நேற்று  (22.01) சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது  வடக்கு, கிழக்கு மீளிணைக்கப்பட வேண்டும், அதிகாரம் பகிரப்பட்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும், தேர்தல் நடத்தப்படா விட்டால், திரும்பத் திரும்ப நாம் உங்களிடம் இப்படி முறையிட்டுக் கொண்டிருப்பதை விட வேறு வழியில்லை என்று தமிழ்த் தரப்புக்கள் அவரிடம் தெரிவித்துள்ளன. 

முல்லைத்தீவில் மகாவலி திட்டத்தின் கீழ் தமிழ் மக்களின் பூர்வீக நிலத்தில் 600 சிங்களக் குடும்பங்களைக் குடியமர்த்தத் திட்டமிடப்படுகின்றது, திருகோணமலையில் மெகா சிட்டி திட்டத்தை முன்னெடுப்பதாகக் கூறி இந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகளை உள்ளீர்க்கும் முயற்சி நடக்கின்றது, மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை பெரும்பான்மை இனத்தவர்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றது, பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல விடயங்களைத் தமிழ்த் தரப்புக்கள், புதிய இந்தியத் தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவற்றை செவிமெடுத்த இந்திய தூதுவர், அபிவிருத்தித் திட்டங்களுடன், அரசியல் தீர்வையே இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது எனக் கூறியுள்ளார். 

இந்தியாவிலிருந்து கடலடி மார்க்கத்தில் மின்சாரம் கொண்டு வரும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.  

வடக்கு, கிழக்கு மீளிணைப்பு, தேர்தல், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விவகாரங்களில் இந்தியா இன்னும் அதிக வகிபாகத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தின. இதற்குப் பதிலளித்த இந்தியத் தூதுவர், "இந்தியாவும், சர்வதேசமும் இலங்கையிடம் இவற்றைச் சொல்லத்தான் முடியும். இந்தியா தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகின்றது. ரணில் விக்கிரமசிங்க இந்தியா வந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி மூடிய அறைக்குள் இந்த விடயங்களை வலியுறுத்தினார். பின்னர் பகிரங்கமாகவும் சொன்னார். இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் எனவும் தெரிவித்தார்.  

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன், தமிழ்த் தேசியக் முன்னியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும், சிரேஷ்ட தலைவர்களான இரா.சம்பந்தன் மற்றும் மாவை.சோ.சேனாதிராஜா பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், வினோநோதராதலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4