நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பில் டிரான் அலஸின் கருக்குக்கு வலுக்கும் எதிர்ப்பு!

#SriLanka #Parliament #International #Lanka4 #Social Media #Defense
Mayoorikka
2 years ago
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பில் டிரான் அலஸின்  கருக்குக்கு வலுக்கும் எதிர்ப்பு!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நாடாளுமன்றத்தில் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்த விவாதத்தில் வெளியிட்ட கருத்துக்களை நிராகரித்துள்ள ஆசிய இணைய கூட்டமைப்பு நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் அதன் தற்போதைய வடிவத்தில் முன்னெடுக்க முடியாதது மேலும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீட்டினை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

 உலகின் மிகவும் வலுவான இணைய தொழில்நுட்ப நிறுவனங்களை உள்ளடக்கிய அமைப்பே ஆசிய இணைய கூட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பு ஆசிய பிராந்தியத்தில் இணையம் தொடர்பான விடயங்களிற்கு தீர்வை காணவும் ஊக்குவிக்கவும் முயல்கின்றது.

 ஆசிய இணையகூட்டமைப்பு அப்பிள் பின்ரெஸ்ட் கூகுள் டுவிட்டர் உட்பட பல நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்கின்றது. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்புஅமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்களை நிராகரிக்கவும் பதிலளிக்கவும் விரும்புகின்றோம் என ஆசிய இணைய கூட்டமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜெவ்பெய்ன் தெரிவித்துள்ளார்.

 இந்த சட்டமூலத்தினை முன்னெடுக்கும் செயற்பாடுகளின் போது நாங்கள் வழங்கிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை அமைச்சரின் உரை அங்கீகரிக்கவில்லை - எங்கள் அமைப்பு பரிந்துரைகளை முன்வைத்திருந்ததுடன் சிங்கப்பூரில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் பிரதிநிதிகளை சந்தித்திருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4