பெலியத்தயில் ஐவர் படுகொலை - சந்தேக நபர் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு!

#SriLanka #Death #Murder #Court Order #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
பெலியத்தயில் ஐவர் படுகொலை - சந்தேக நபர் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான சந்தேகநபரான சமன் குமாரவை நாளை வரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தெய்யந்திர நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், சந்தேகநபர்கள் பயணித்த வாகனத்தை குறித்த நபர் செலுத்தியதாக கூறப்படுகின்றது.

images/content-image/1706244486.jpg

குறித்த குற்றச்செயலுக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு T-56 ரக துப்பாக்கிகள் கொண்டு செல்லப்பட்ட உந்துருளியையும், சந்தேகநபர்கள் தப்பிச் செல்லும் நோக்கில் பயன்படுத்திய மற்றுமொரு சிற்றூர்ந்தும் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநபரான சமன் குமார பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4