மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு
#Death
#Actor
#TamilCinema
#Award
#Kollywood
#Politician
#Indian
#lanka4Media
#lanka4.com
#Vijayakanth
Prasu
1 year ago

2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும்.அதே சமயம் பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் தனிமனிதர்களின் சிறப்பான பணிகளுக்காக வழங்கப்படும் மரியாதைகளின் படிநிலையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பத்ம விருதுகளில் மூன்று பிரிவுகள் உள்ளன.
அவை பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன். பத்ம விருதுகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ராஷ்டிரபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவிப்பார்.
இந்நிலையில் கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி விஜயகாந்த் காலாமானார்.



