விருச்சிக ராசியினர் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4Media #lanka4.com
Prasu
9 months ago
விருச்சிக ராசியினர் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது - ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்கள் செயலில் மாற்றம் உண்டாகும். திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரத்தில் அக்கறை காட்டுவீர்கள். பரணி: தள்ளிப்போன முயற்சி இன்று நிறைவேறும். நினைத்ததை சாதிப்பீர். கடவுள் வழிபாடு நன்மை தரும். கார்த்திகை 1: உங்கள் செயல்களில் குறை கூறியவர் வருத்தம் அடைவார். வருமானம் அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: முயற்சி முன்னேற்றம் அடையும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும். ரோகிணி: திட்டமிட்டு செயல்பட்டு செயலில் லாபம் காண்பீர். மறைமுகத்தொல்லை கொடுத்தவர் விலகுவர். மிருகசீரிடம் 1,2: உடல்நிலை பாதிப்பு சரியாகும். நினைத்ததை சாதிப்பீர். வருமானத்தடை விலகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் துணிச்சலுடன் செயல்படுவீர். எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்கும். திருவாதிரை: வேலைத் தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். இழுபறி பிரச்னை முடிவிற்கு வரும். புனர்பூசம் 1,2,3: நண்பர் உதவியுடன் செயலில் லாபம் காண்பீர்.தொழிலில் லாபம் அதிகமாகும். நேற்றைய கடன் அடைபடும்.

கடகம்

புனர்பூசம் 4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பூசம்: சிக்கல்களை சந்தித்தாலும் உங்கள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஆயில்யம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். பிறரின் செல்வாக்கு அதிகரிக்கும்.

சிம்மம்

மகம்: மதியம் வரை நெருக்கடி இருக்கும். தேவையற்ற செலவு தோன்றும்.மதியத்திற்கு பின் நிலைமை சீராகும். பூரம்: மதியத்திற்கு மேல் முயற்சி இழுபறியாகும். மனதில் குழப்பம் வரும். பயணத்தில் சங்கடம் தோன்றும். உத்திரம் 1: செயல்களில் தடுமாற்றத்தை சந்திப்பீர். திடீர் நெருக்கடிக்கு ஆளாவீர். குடும்பத்தில் சல சலப்பு ஏற்படும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வருமானத்தடை விலகும். பண வரத்து அதிகரிக்கும். மாலையில் எதிர்பாராத செலவு தோன்றும். அஸ்தம்: தொழிலில் இருந்த தடை விலகும். இழுபறி பிரச்னை முடியும். பேசும் வார்த்தையில் கவனம் தேவை. சித்திரை 1,2: நேற்று மேற்கொண்ட முயற்சி இன்று சாதகமாகும். வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

துலாம்

சித்திரை 3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர். வியாபார முயற்சி பலிக்கும். பணம் பலவழிகளில் வரும். சுவாதி: வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உறவினர் ஒருவருக்கான நெருக்கடி குறையும். விசாகம் 1,2,3: குடும்ப நெருக்கடி நீங்கும். பொருளாதாரம் சீராகும். நண்பர் உதவியால் தொழிலில் லாபமாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: துணிச்சலுடன் செயல்படுவீர். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். தொழில் மாற்றம் கருதி யோசிப்பீர். அனுஷம்: போட்டிகளை சமாளித்து வியாபாரத்தை விரிவு செய்வீர். வெளியூர் பயணத்தை இன்று தவிர்ப்பது நல்லது. கேட்டை: இன்று உங்கள் தொழில் முன்னேற்றம் விறுவிறுப்பாகும். தந்தை வழி உறவுகளால் லாபம் காண்பீர்கள்.

தனுசு

மூலம்: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும். உறவுகளுடன் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். பூராடம்: அலைச்சல் அதிகரித்தாலும் விருப்பம் நிறைவேறும். நேற்றுவரை இருந்த பிரச்னை படிப்படியாக குறையும். உத்திராடம் 1: எதிர்பாராத நெருக்கடிகளால் சங்கடத்திற்கு ஆளாவீர். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

மகரம்

உத்திராடம் 2,3,4: செயல்களில் நீங்கள் எதிர்பார்த்தவற்றை அடைவீர். மதியத்திற்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்கும். திருவோணம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பணவரவில் தடை ஏற்படும். நினைத்ததை அடைவீர். அவிட்டம் 1,2 : கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. நண்பர்களால் சில சங்கடம் உண்டாகும். யோசித்து செயல்படுவது நல்லது.

கும்பம்

அவிட்டம் 3,4: தொழில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடம் விலகும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். சதயம்: ஆரோக்கியம் சீராகும். உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர் விலகுவர். குடும்பத்தில் குழப்பம் நீங்கும். பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: பூர்வீகசொத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். உத்திரட்டாதி: மனக்குழப்பம் நீங்கும். எதிர்பார்த்ததை அடைவீர். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகுவர். ரேவதி: மற்றவரால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். சொத்து விவகார பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். வரவு அதிகரிக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!