தாய் அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ள பாடகி பவதாரணியின் உடல்

#Death #TamilCinema #Kollywood #Singer #lanka4Media #lanka4.com
Prasu
2 years ago
தாய் அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ள பாடகி பவதாரணியின் உடல்

இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி ஜனவரி 25-ஆம் திகதி இலங்கையில் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். 

சிகிச்சை பலனின்றி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்நிலையில், கல்லீரல் புற்றுநோய் காரணமாக காலமான பவதாரணியின் உடல், தேனியில் இருக்கும் இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது உடல் அருகே நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இதனையடுத்து, அஞ்சலிக்காக சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் நேற்று வைக்கப்பட்டு இருந்த நிலையில், கார்த்தி, விஷால், வெங்கட் பிரபு, குட்டி பத்மினி, ராதிகா, விஜய் ஆண்டனி, சிம்பு, மோகன் ராஜா, மனோஜ் பாரதிராஜா, ராமராஜன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று இரங்கலை தெரிவித்தனர்.

அஞ்சலிக்காக சென்னை தி.நகரில் வைக்கப்பட்டு இருந்த பவதாரணியின் உடல் இன்று தேனி வந்தது. 

பிரத்யேக ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு அவருடைய உடல் தேனிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இன்று காலை 11 மணி அளவில் அவரது உடல் தேனி வந்தது. 12 மணிக்கு மேல் இறுதிச்சடங்கு நடக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4