திரைப்படமாக உருவாகும் இசைஞானியின் வாழ்க்கை வரலாறு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Movie
#Ilayyaraja
Dhushanthini K
1 year ago

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது.
இந்த படத்தை கனெக்ட் மீடியா தயாரிக்கிறது. இதில் இசைஞானியாக நடிக்க நடிகர் தனுஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா ஏற்கனவே கூறிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், படப்பிடிப்பு இந்த வருடத்தில் ஆரம்பமாகும் எனவும் கூறப்படுகிறது. அத்துடன் 2025 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 50 ஆண்டுகளில் 1000க்கும் மேற்பட்ட படங்கள் 7000க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ள இசைஞானி இளையராஜா இதுவரை 20000க்கும் மேற்பட்ட கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.



