டெல்லியில் கோவில் மேடை இடிந்து விழுந்து விபத்து : பெண் ஒருவர் பலி!
#India
#SriLanka
#Accident
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இந்தியாவில் கோவில் ஒன்றில் மேடை இடிந்து விழுந்து விபத்துகுள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல்லியில் உள்ள கல்காஜி என்ற கோவிலில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கோவிலில் நடந்த பூஜையின் போது, பக்தர்கள் மீது மேடை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு முறையான அனுமதி கூட பெறப்படவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த மத கச்சேரிக்கு சுமார் 1600 பேர் கூடியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



