சுவிஸ்-லசத்போம் நகரில் நடைபெற்ற தைப்பொங்கல் விழா(புகைப்படம் இணைப்பு)

#Switzerland #people #swissnews #Pongal #celebration #Swiss Tamil News #2024 #cultural #organization #lanka4Media #lanka4.com #Lanka4 swiss tamil news
Prasu
9 months ago
சுவிஸ்-லசத்போம் நகரில் நடைபெற்ற தைப்பொங்கல் விழா(புகைப்படம் இணைப்பு)

“நொசத்தல் இளையோர் , தமிழ் பெண்களுடன் கரம் கொடுத்தல்” எனும் இரு அமைப்புகளும் ஒன்றிணைந்து நடாத்திய மூன்றாவது தைப்பொங்கல்விழா 27.01 2024 சனிக்கிழமை “லசத்போம் நகரில்” கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

நொசத்தல்வாழ் பல்லின மக்களின் இன,மத, மொழி கடந்த ஒற்றுமை உணர்வின் ஒன்றிணைவாக்கம் மேலோங்கியிருந்தது. தமிழர் வாழ்வியல் உண்மைகளை வெளிநாட்டவர்களுக்கு கொண்டுசேர்த்த பெருமையை இப்பொங்கல்விழா வெளிப்படுத்தியிருந்தது.

images/content-image/1706474423.jpg

இவ்விழா தமிழரின் சமய விஞ்ஞான அழகியல் தன்மைகளையும் உள்ளடக்கி எமது கலைநிகழ்வுகளையும் தேச எழுச்சியையும் நினைவு கூர்ந்த நாளாகவும் அமைந்திருந்தது. 

சுவிஸ் நாட்டின் முக்கிய அரசியல் கலாச்சார சமூக பிரமுகர்களும் கத்தோலிக்க மதகுருவும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியமை பெருமைக்குரிய விடயமாகும்.

images/content-image/1706474444.jpg

இருஅமைப்புக்களும் தொடர்ச்சியாக தனிநபராகவும் அமைப்பு ரீதியாகவும் செயற்திட்டங்களிற்கான துறைகளில் பங்குகொண்டு நான்கு தடவைகள் நாம் “பன்னாட்டவருக்கான திறமை பரிசு “ பெற்ற வெற்றியாளர்களாக மாநில ரீதியாக தெரிவுசெய்யப்பட்டிருக்கிறோம் என்று பெருமையுடன் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் மாநில கலாச்சார நிகழ்வுகள், பல்துறைசார் அமைப்புகளுடன் இயங்கும் தன்மை , மாநிலம் சார்ந்த போராட்டங்கள் , அரசாங்க கூட்டங்கள் அனைத்திலும் தொடர்ந்தும் நாம் பங்களிப்பு செய்துவருகின்றோம் என்றும் தமிழர்கள் செயல்திறன் கொண்டவர்கள் என்றும் நாம் பாராட்டுதல்கள் பெற்றோம்.

images/content-image/1706474467.jpg

தமிழர்களாகிய நாம் இயற்கையுடன் இணைந்து வாழும் தன்மையையும், கலை, கலாச்சார, பாரம்பரிய அடையாளங்களையும் நாம் வாழும் புலம்பெயர்மண்ணிலே ஆழமாக பதித்துவிட்டோம் என்ற உணர்வே எல்லோரது மனதிலும் நிறைந்திருந்தது.

images/content-image/1706474489.jpg

இதற்கமைய எமது நிகழ்வினை அனைத்து சுவிஸ்வாழ் மக்களிடமும் அன்றைய தினமே சமூக வலைத்தளங்கள்,ஊடகங்கள், முகநூல்கள் என்பவற்றில் பகிர்ந்தமை பெருமைக்குரிய விடயமாகும். 

எமது தைப்பொங்கல் விழா அனைவருக்கும் சிறந்த அனுபவங்களை கொடுத்து தமிழ் இனத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது என்பதில் ஐயமில்லை.

images/content-image/1706474505.jpg

images/content-image/1706474550.jpg

images/content-image/1706474564.jpg

images/content-image/1706474581.jpg

images/content-image/1706474600.jpg

images/content-image/1706474620.jpg

images/content-image/1706474641.jpg

images/content-image/1706474758.jpg

images/content-image/1706474678.jpg

images/content-image/1706474745.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!