மகர ராசியினருக்கு சந்திராஷ்டமம் தொடர்வதால் கவனம் தேவை - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4Media #lanka4.com
Prasu
2 months ago
மகர ராசியினருக்கு சந்திராஷ்டமம் தொடர்வதால் கவனம் தேவை - ராசிபலன்

மேஷம்

அசுவினி: இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் முடியும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். பரணி: உங்கள் செயலில் உற்சாகம் இருக்கும். நேற்றைய பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். கார்த்திகை 1: பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். சேமிப்பு உயரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: பொருளாதார நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். வழக்கு தள்ளிப்போகும். ரோகிணி: தாய்வழி உறவினர் ஆதரவுடன் தேவையை நிறைவேற்றுவீர். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்பு வரும். மிருகசீரிடம் 1,2: வேலை வாய்ப்பிற்காக மேற்கொண்ட முயற்சி நிறைவேறும். சொத்து விவகாரம் சுமுகமாக முடியும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருவாதிரை: உடல்நிலையில் கவனம் தேவை. நண்பர்கள் ஆதரவுடன் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புனர்பூசம் 1,2,3: வருமானத்தில் இருந்த தடை விலகும். நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும்.

கடகம்

புனர்பூசம் 4: குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர். நண்பர்களால் நன்மை ஏற்படும். பழைய கடன் வசூலாகும். பூசம்: செயலில் வேகம் இருக்கும். வாக்கு பலிதமாகும். ஒரு சிலர் தொழிலில் புதிய முதலீடு செய்வீர்கள். ஆயில்யம்: வியாபாரத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். ஒரு சிலர் வியாபாரத்தை மாற்றம் செய்வீர்.

சிம்மம்

மகம்: செயல்களில் இழுபறியான நிலை இருக்கும். அடுத்தவரை நம்பி எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம். பூரம்: உங்கள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். தேவைகள் பூர்த்தியாகும். உத்திரம் 1: பெரியவர்கள் வழிகாட்டுதல் லாபம் தரும். வியாபாரம் விருத்தியாகும். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த வெற்றியை பெறுவீர்.

கன்னி

உத்திரம் 2,3,4: வீண் செலவுகளால் நெருக்கடி உண்டாகும். பணிபுரியும் இடத்தில் எச்சரிக்கை அவசியம். அஸ்தம்: மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். வரவு செலவில் நெருக்கடி உண்டாகும். சித்திரை 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் எண்ணம் நிறைவேறும்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். நண்பர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுவாதி: நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். விசாகம் 1,2,3: வழக்கமான செயல்களில் லாபம் காண்பீர். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும்.

விருச்சிகம்

விசாகம் 4: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி விலகும். அனுஷம்: எதிர்பார்த்த பணம் உங்களைத் தேடிவரும். உங்கள் முயற்சி நிறைவேறி அனுகூலம் உண்டாகும். கேட்டை: அலுவலகத்தில் இருந்த பிரச்னை விலகும். எதிர்பாராத வரவு வரும். உங்கள் சங்கடம் நீங்கும்.

தனுசு

மூலம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். செய்து வரும் தொழிலில் லாபம் உண்டாகும். பூராடம்: சேமிப்பு அதிகரிக்கும். வருமானத்தில் கவனம் செலுத்துவீர். உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். உத்திராடம் 1: குடும்பம் நெருக்கடிகளை சந்தித்தாலும் அதை திறமையால் சமாளிப்பீர். முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்.

மகரம்

உத்திராடம் 2,3,4: நேற்றைய நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். புதிய முயற்சி பலன் தரும். திருவோணம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் கவனம் தேவை. நீண்ட முயற்சிக்குப்பின் ஒரு செயல் நிறைவேறும். அவிட்டம் 1,2: மனதில் குழப்பம் தோன்றும். வெளியூர் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.

கும்பம்

அவிட்டம் 3,4: நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது வேறாக இருக்கும். நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. சதயம்: வருமானம் அதிகரிக்கும் வாழ்க்கைத் துணையின் விருப்பம் நிறைவேறும். வெளியூர் பயணம் நன்மை தரும். பூரட்டாதி 1,2,3: நீங்கள் நினைத்ததை அடைவீர். குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவு நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். விருப்பம் நிறைவேறும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்திரட்டாதி: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடி தோன்றும். வேலை பளு அதிகரிக்கும். ரேவதி: நேற்று இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். உங்கள் செயலில் முன்னேற்றம் காண்பீர்.