திமுக கட்சியானது தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட்டணிகளுடன் பேச்சு

#India #Tamil Nadu #கட்சி #லங்கா4 #parties #பேச்சு #discussion #இந்தியா #லங்கா4 ஊடகம் #Lanka4indianews #Lanka4_india_news #Lanka4_india_tamil_news
Mugunthan Mugunthan
7 months ago
திமுக கட்சியானது தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட்டணிகளுடன் பேச்சு

நேற்று காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், திமுக கட்சி தனது கூட்டணி கட்சிகளோடு அடுத்தடுத்து பேச்சுவார்த்தை மேற்கொள்கிறது.

 நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகி வருகின்றன. 

images/content-image/1706516039.jpg

அந்தவகையில், தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, நிர்வாகிகளுடன் ஆலோசனை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதால் அரசியல் களத்தில் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

 திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மமக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.