மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைகளில் பொலித்தீன் பாவனையை முற்றாக தடை செய்ய நடவடிக்கை!

#SriLanka #Hospital #sri lanka tamil news
Thamilini
2 years ago
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைகளில் பொலித்தீன் பாவனையை முற்றாக தடை செய்ய நடவடிக்கை!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் வைத்தியசாலை வளாகத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலித்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சூழல் மற்றும் பொது இடங்களில் அதிகரித்து வரும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையால் சூழல் மாசடைவதையும் அதே நேரம் மழை காலங்களில் சிதறிக் கிடக்கும் பொலித்தீன் பைகளில் இருந்து டெங்கு நுளம்பு பரவல் அதிகரித்து காணப்படுவதால் மன்னார் வைத்தியசாலையில் முதல் கட்டமாக பொலித்தீன் பைகளின் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது.  

குறிப்பாக சிகிச்சைக்காக வருபவர்கள், நோயாளர்களை பார்வையிட வருபவர்கள் பொலித்தீன் பைகளுக்கு பதிலாக உக்கக் கூடிய அல்லது மீள் பயன்படுத்தக்கூடிய பைகளை கொண்டு வருமாறு வைத்தியசாலை நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.  

அதே நேரம் பொலித்தீன் பைகளுடன் வருபவர்களிடம் இருந்து பொலித்தீன் பைகள் வாங்கப்பட்டு மாற்றீட்டு பைகள் தற்காலிகமாக வைத்தியசாலை நிர்வாகத்தினரால் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4