இலங்கை வரும் தாய்லாந்து பிரதமர் : ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடவும் திட்டம்!

#SriLanka #Ranil wickremesinghe #Thailand #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கை வரும் தாய்லாந்து பிரதமர் : ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடவும் திட்டம்!

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அடுத்த மாதம்  இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின்பேரில் பெப்ரவரி 03,04 ஆம் திகதிகளில் அவர் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். 

அன்று நடைபெறும் இலங்கையின் 76 ஆவது சுதந்திரத்தினக் கொண்டாட்டங்களில் அவர் கலந்துகொள்வார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 

அந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடலை நடத்துவதுடன் இலங்கை தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வில் அவர் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4