வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது!

#SriLanka #Vavuniya #drugs #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வவுனியாவில்  ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது!

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் நேற்று (29.01) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஐஸ் போதைப் பொருளை விற்று வருவதாக மடுக்கந்தை பகுதியிலுள்ள விசேட அதிரடிப் படையினருக்கு விசேட தகவல் கிடைத்துள்ளது.  

இந்நிலையில் வேப்பங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகரப் பகுதி நோக்கி ஐஸ் போதைப் பொருளுடன் மோட்டர் சைக்கிளில் வந்த குறித்த பெண்ணை வைரவபுளியங்குளம், தொடருந்து நிலைய வீதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் வழிமறித்து சோதனை செய்துள்ளனர். 

இதன்போது  920 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன், குறித்த பெண்ணை கைது செய்து வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.  

கைது செய்யப்பட்ட பெண் வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவராவார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4