பொலிஸாரின் நீதி நடவடிக்கை மூலம் பாரிய அநீதி இழைக்கப்படுகிறது - ஹிருணிகா!

#SriLanka #Police #Tamilnews #sri lanka tamil news #hirunika #Justice
Thamilini
2 years ago
பொலிஸாரின் நீதி நடவடிக்கை மூலம் பாரிய அநீதி இழைக்கப்படுகிறது - ஹிருணிகா!

போதைப்பொருள் சோதனைகளை மேற்கொண்டு வரும் நீதி நடவடிக்கை மூலம் பாரிய அநீதி இழைக்கப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.  

அந்த நடவடிக்கையின் இரு தலைவர்களான அமைச்சர் திரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஆகிய இருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  நீதி நடவடிக்கை போதைக்கு அடிமையானவர்களைக் கைது செய்கிறது என்றும் அவர்களைக் கைது செய்யாமல் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 

 உண்மையான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் சட்டைப் பையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4