கனடா விசா எடுத்தவர்களுக்கான ஒரு முக்கிய அறிவித்தல்

#Student #Canada #Tourist #immigration #work #Tamilnews #Visa #Canada Tamil News #lanka4Media #lanka4news #lanka4.com #Lanka4 canada tamil news
Prasu
1 year ago
கனடா விசா எடுத்தவர்களுக்கான ஒரு முக்கிய அறிவித்தல்

கனடாவில் வசிக்கும் எங்கட ஆக்கள் சொல்லுற பதில் விசிட் விசாவில் வந்தால் ஆறு மாதத்திற்குப் பிறகு திரும்ப ஊருக்கு போகணும் என்று. இங்க இருக்கிற கன பேருக்கு வீடும் வேலையும் மட்டும் தான் தெரியும். 

அப்பிடியான ஆக்கள் சொல்ற பதில் தான் இங்க நிக்கேலாது என்று சொல்லுறது. இதால தான் பல பேர் விசா கிடைச்சும் இங்க வராமல் ஊரில இன்னும் இருக்கிறாங்கள் என்பது கவலைக்குரிய விடயமாகும். 

images/content-image/1706602237.jpg

முக நூலில் பல நண்பர்கள் கேட்டுக் கொண்டதிற்கு அமைய இந்த பதிவை இடலாம் என நினைக்கிறேன். நீங்கள் விசிட் விசாவில் வந்திருந்தால் உங்களுக்கு உங்களுடைய கடவுச்சீட்டு செல்லுபடியாகும் காலம் வரை விசா வழங்கப்பட்டு இருக்கும். 1 - 10 வருடங்கள் வரை. ஆனால் கனடா குடிவரவு சட்டத்தின் படி விசிட் விசாவில் ஆறு மாத காலம் வரை தான் இங்கு நிற்கலாம். 

மீண்டும் உங்கள் நாட்டுக்கு சென்று மறுபடியும் வரலாம் என கூறுகின்றது. ஆனாலும் நீங்கள் கனடாவில் நிரந்தரமாக வசிப்பதற்கு விருப்பம் உடையவராக இருந்தால் உங்கள் விசிட் விசாவை Student Visa ஆக அல்லது Work Permit ஆக மாற்ற முடியும். 

இவ்வாறு மாற்றி 1½ & 2 வருடங்களின் பின் நீங்கள் கனடாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான நிரந்தர குடியிருப்பாளருக்கு (PR) விண்ணப்பிக்கலாம். உங்களுக்கு PR க்கு விண்ணப்பிக்கும் போது உங்களுடைய கணவன் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகளும் விண்ணப்பிக்கலாம். 

images/content-image/1706602247.jpg

உங்களுக்கு PR கிடைக்கும் போது அவர்களுக்கும் கிடைக்கும் அதன் பின்னர் அவர்கள் கனடாவிற்கு வரலாம். அத்துடன் உங்கள் குடும்பம் இங்கு வந்த பின்னர் உங்களுடைய 21 வயதிற்கு உட்பட்ட சகோதரர் மற்றும் சகோதரிகளுக்கும் PR க்கு விண்ணப்பித்து அதன் மூலம் கனடா வரலாம். 

உங்களுடைய பெற்றார்களை சூப்பர் விசா மூலம் கனடாவிற்கு அழைக்கும் சலுகைகளையும் இந்த நாடு வழங்குகின்றது. சில கற்கைநெறிகள் மற்றும் கம்பனிகள் உங்களை சார்ந்தவர்களான கணவன் அல்லது மனைவிக்கு Dependent Visa & Open work permit வழங்குகின்றது. 

images/content-image/1706602257.jpg

இதன் மூலமும் நீங்கள் குடும்பமாக இங்கு வசிக்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படுகிறது. நீங்கள் Work permit இல் இங்கு வசிக்கும் போது உங்களுடைய பெற்றார்களை விசிட் விசா மூலம் கனடாவிற்கு வரவழைக்கலாம்.

PR கிடைத்து அதன் பின்னர் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் இங்கு வசிப்பதன் மூலம் நீங்கள் கனடா பிரஜைக்கு (Citizenship) விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பல அரிய சந்தர்ப்பங்களை தவறவிடாது பயன்படுத்தி கொள்ளுதல் சிறப்பானதாகும்.

இது ஒரு முகநூல் பதிவு

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!