நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் களமிறங்கும் சீமான்

#Cinema #Actor #Director #Movie #Kollywood #Politician #Seeman
Prasu
1 year ago
நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் களமிறங்கும் சீமான்

நடிகர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

முன்னதாக கோமாளி என்ற படத்தை இயக்கியிருந்த பிரதீப், இந்தப் படத்தில் நடிகராகவும் அறிமுகமானார். 

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நாயகனாக களமிறங்கியுள்ளார். 

எல்ஐசி அதாவது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டு இறுதியில் பூஜையுடன் துவங்கப்பட்ட நிலையில் தொடர்ந்து படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. 

தற்போது ஈஷா மையத்தில் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் பிரதீப்பின் அப்பாவாக பிரபல இயக்குநர், நடிகர் மற்றும் அரசியல்வாதியான சீமான் நடிக்கவுள்ளார். 

படத்தில் இயற்கை விவசாயத்தை விரும்பும் கேரக்டரில் இவர் நடித்துவரும் சூழலில் இவருக்கு எதிராக செயற்கை விவசாயத்தை விரும்பும் கேரக்டரில் பிரதீப் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்படும் கருத்து வேறுபாட்டை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!