இலங்கையின் பொருளாதாரத்தின் தூணாக உல்லாசப்பிரையாணத் துறையே விளங்குகிறது!

#SriLanka #Tourist #economy #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையின் பொருளாதாரத்தின் தூணாக உல்லாசப்பிரையாணத் துறையே விளங்குகிறது!

உலகில் பல நாடுகளுக்கு சுற்றுலா பயணிகள் சென்றாலும் இலங்கைக்கு அதிகமாகவே வருகிறார்கள். அவ்வகையில் இவ்வருடம் (2024) ஜனவரி முதல் 28 நாட்களில் 189 574 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளனர். 

 2023 ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 102545 ஆகும். ஜனவரி முதல் 28 நாட்களில், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் ஜனவரி 15 அன்று இலங்கைக்கு வந்தனர். 

 அன்றைய தினம் 8,541 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.   ஜனவரியில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இதன்படி 31,920 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். 

மேலும், ரஷ்யாவிலிருந்து 28,159 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 15,252 பேர் வ ந் துள்ளனர். ஜெர்மனியில் இருந்து 12,340 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதனூடாக இலங்கையில் வெளி நாட்டு நாணையங்கள் வருமானமாக அதிகம் கிடைப்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4