அமெரிக்காவிற்கு பறந்த கமலஹாசன். முடியப்போகும் இந்தியன் 2 படப்பிடிப்பு.

#Cinema #TamilCinema #United_States #Kamal
அமெரிக்காவிற்கு பறந்த கமலஹாசன்.  முடியப்போகும் இந்தியன் 2 படப்பிடிப்பு.

கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தின் முதல் ஷெட்யூல் நிறைவடைந்தது. இதையடுத்து அவர் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

 கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘தக் லைஃப்’. மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

images/content-image/1706709687.jpg

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது. இதில் கமல்ஹாசன், ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சைபீரியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற உள்ளது.

 இதில் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கவுதம் கார்த்திக் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இதனிடையே, இன்று கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இது ‘இந்தியன் 2’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. ‘தக் ஃலைப்’, ‘இந்தியன் 2’ படங்களுக்கிடையே நாடாளுமன்றத் தேர்தல் பணிகளையும் சேர்த்து கவனித்து வருகிறார் கமல்ஹாசன்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4