பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் 878 பேர் கைது!

#SriLanka #Arrest #Police #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் 878 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் இன்று (01.02) காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 878 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

போதைப்பொருள் குற்றங்களுக்காக 649 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பட்டியலில் இருந்த 229 சந்தேக நபர்கள் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.  

இந்த நடவடிக்கையின் போது 130 கிராம் ஹெரோயின், 134 கிராம் ஐஸ் மற்றும் ஏனைய போதைப்பொருள்கள் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.  

மூன்று சந்தேக நபர்களை தடுப்பு காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மேலதி விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  போதைக்கு அடிமையான 04 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதேவேளை   கைரேகைகள் மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட 03 சந்தேக நபர்களும், குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 08 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4