திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை மீரா சோப்ரா

#Cinema #Actress #wedding #Tamilnews #Kollywood
Prasu
2 years ago
திருமணம் குறித்து மனம் திறந்த  நடிகை மீரா சோப்ரா

நடிகை மீரா சோப்ராவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த செய்தியை அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் ‘அன்பே ஆருயிரே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிலா. மீரா சோப்ர என்ற இயற்பெயர் கொண்ட இவர் அடுத்து ‘மருதமலை’, ‘லீ’ போன்ற படங்களிலும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

இப்போது, தமிழ்ப் படங்களைக் காட்டிலும் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் பரினிதி சோப்ரா ஆகியோர் இவரது சகோதரிகள். 

இவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்ட நிலையில், மீராவுக்கு எப்போது திருமணம் எனவும் ரசிகர்கள் கேட்டு வந்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த நல்ல செய்தியை உறுதிப்படுத்தி இருக்கிறார் மீரா. 

நாற்பது வயதில் திருமணம் செய்யப் போவதாக மீரா குறித்து செய்திகள் வலம் வந்தது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்திருக்கும் மீரா சோப்ரா, “நீங்கள் கேள்விப்பட்ட செய்திகள் சரிதான். 

எனக்கு விரைவில் திருமணம் ஆகப்போகிறது. மார்ச் மாதம் நடக்க இருக்கும் எனது திருமணத்திற்கு தீவிரமாக ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். ராஜஸ்தானில் நடக்கும் என்னுடைய திருமணத்திற்கு தேதியும் குறித்துவிட்டனர். 

மாப்பிள்ளை குறித்தான விஷயத்தை சீக்கிரம் சொல்வேன்” என்று சஸ்பென்ஸ் வைத்துள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4