விவசாயிகள் விவகாரம். மோடி ராகுலுக்கு செருப்படி பதில்.

#India #D K Modi #budget #Farmers
Mugunthan Mugunthan
7 months ago
விவசாயிகள் விவகாரம். மோடி ராகுலுக்கு செருப்படி பதில்.

அனைத்து தரப்பினரையும் மேம்படுத்தும் வகையில் இடைக்கால பட்ஜெட் உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

2024-2025-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் இதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

தனது பட்ஜெட் உரையின் போது பல பெரிய திட்டங்கள் மற்றும் புதிய வசதிகளை மேம்படுத்துவது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில் இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்.

 அப்போது; அனைத்து தரப்பினரையும் மேம்படுத்தும் வகையில் இடைக்கால பட்ஜெட் உள்ளது. இளையோருக்கும், பெண்களுக்கும் நலன் பயக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. விவசாயிகளுக்காக பல்வேறு புதிய முடிவுகள் இன்றைய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.

images/content-image/1706779412.jpg

 மத்திய இடைக்கால பட்ஜெட் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. எதிர்கால இந்தியா என்ற தாரக மந்திரத்திற்கு வலு சேர்க்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. புதிய தொழில் தொடங்குவதற்கான பொன்னான வாய்ப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. 

உள்கட்டமைப்புக்கு ஒதுக்கிய தொகை வேகமான வளர்ச்சி, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு காப்பீடுகள் கொடுக்கப்பட்டது மிகப்பெரிய பாதுகாப்பை வழங்கியுள்ளது.

 சோலார் தகடுகள் அமைப்பதன் மூலம் ஒரு கோடி வீடுகள் இலவச மின்சார சேவையை பெற முடியும். வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்டின் பலன்கள் மக்களுக்கு நேரடியாக கிடைக்கும் என உறுதியளிக்கிறேன். 

ஏழைகளையும், விவசாயிகளையும் கை தூக்கி விடும் பட்ஜெட் இது என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.