பிரான்ஸிற்குள் இவ்வளவு பிரச்சனைகளா? வெளி நாட்டவர்கள்தான் இதற்குக் காரணமாம்.

#France #migrants #foreign #France Tamil News #Changes
Mugunthan Mugunthan
7 months ago
பிரான்ஸிற்குள் இவ்வளவு பிரச்சனைகளா? வெளி நாட்டவர்கள்தான் இதற்குக் காரணமாம்.

இன்று பெப்ரவரி 1 ஆம் திகதி. இந்த புதிய மாதத்தில் பிரான்சில் பல புதிய மாறுதல்கள் நடைமுறைக்கு வருகின்றன. 

மின்சாரக்கட்டணம்!

மின்சாரக்கட்டணம்  இன்று முதல் அதிகரிக்கப்படுகிறது. உங்கள் மின்சார கட்டணம் செலுத்தும் முறைக்கு அமைவாக 8.6 அல்லது 9.8% சதவீதத்தால் இந்த கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் மின்சாரக்கட்டணம் 15% சதவீதத்தாலும், ஓகஸ்ட் மாதத்தில் 10% சதவீதத்தாலும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 எரிவாயு!

 எரிவாயு கட்டணம் இன்று முதல் சிறிய அளவில் குறைக்கப்படுகிறது. வீடு வெப்பமூட்டுவதற்காகவும், வெந்நீருக்காகவும் எரிவாயு பயன்படுத்துபவர்களுக்கான தொகை €0.13244 யூரோக்களில் இருந்து €0.12144 (kWh) யூரோக்களாக குறைக்கப்படுகிறது.

 அதேவேளை, வெப்பமூட்டிக்காக மட்டும் எரிவாயு பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் €0.10950 யூரோக்களில் இருந்து €0.09851 (kWh) யூரோக்களாக குறைக்கப்படுகிறது.

சுங்கவரி!  

 நெடுஞ்சாலை பராமரிப்புக்கான சுங்கவரிக்கட்டணம் கிட்டத்தட்ட 3% சதவீதத்தால் அதிகரிப்புக்கு உள்ளாகிறது. முன்னதாக 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 4.75% சதவீதத்தால் அதிகரித்திருந்த சுங்கவரிக்கட்டணம் தற்போது, பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2.71% சதவீதத்தால் அதிகரிக்கிறது.