கனடாவில் கார் திருட்டுக்களை நிறுத்த கடுமையான சட்ட நடவடிக்கை.

#Canada #Law #Theft #Restrictions #Canada Tamil News
கனடாவில் கார் திருட்டுக்களை நிறுத்த கடுமையான சட்ட நடவடிக்கை.

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கார் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 ஒன்றாரியோ மாகாண முதல்வர் டாக் போர்ட் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கனடாவில் பிணை வழங்குதல் தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்படுவதாகவும் இதன் அடிப்படையில் குற்ற செயல்களில் ஈடுபடுபவருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 எதிர்வரும் காலங்களில் கார் திருட்டில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என அவர் நேரடியாக எச்சரித்துள்ளார். ஒன்றாரியோ மாகாணத்தில் ஆயுத மற்றும் குழு வன்முறைகளை தடுக்கும் நோக்கில் 121 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

images/content-image/1706796796.jpg

 எனினும் இந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது பற்றிய விபரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை. குறிப்பாக கார் திருட்டை தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 நாடு முழுவதிலும் இடம் பெற்று வரும் வன்முறை சம்பவங்களை தடுக்கும் நோக்கில் கனடிய மத்திய அரசாங்கம் 390 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!