குற்றவாளியை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்!

#SriLanka #Death #Police #Kilinochchi #Investigation
PriyaRam
2 years ago
குற்றவாளியை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரமோட்டை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக அப்பகுதிக்கு விரைந்த தருமபுரம் பொலிஸார், குறித்த செயற்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபரை கைது செய்ய முற்பட்டபோது சந்தேக நபர் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளார்.

இதனையடுத்து, அவரை கைது செய்வதற்காக துரத்திச் சென்ற வேளை மிருக வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுதுவக்கு வெடித்துள்ளது.

இதில், 37 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4