பாண் விற்பனை தொடர்பில் வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

#SriLanka #government #Gazette
PriyaRam
2 years ago
பாண் விற்பனை தொடர்பில் வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒரு இறாத்தல் பாணின் பரிந்துரைக்கப்பட்ட எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என்றும் அதன் மாறுபாடு 13.5 கிராமிற்கு குறையாமல் இருக்க வேண்டும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

images/content-image/1706859747.jpg

அத்தோடு அரை இறாத்தல் பாணின் பரிந்துரைக்கப்பட்ட எடை 225 கிராமாக இருக்க வேண்டும் எனவும் அதன் மாறுபாடு 09 கிராமிற்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, விற்பனைக்கு காட்சிப்படுத்தப்படும் பாணின் எடை தெளிவாக காணக்கூடிய வகையில் இருக்க வேண்டும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4