விஜய் அரசியலில் ஊழல் கடலில் நீந்துவாரா? மூழ்குவாரா?

#Cinema #Actor #Vijay #Kollywood #Politician #Candidate
Prasu
9 months ago
விஜய் அரசியலில் ஊழல் கடலில் நீந்துவாரா? மூழ்குவாரா?

நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் நகர்வுக்கான வேலைகளை பார்த்து வரும் அவர் இன்று தன்னுடைய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி விஜய் மக்கள் இயக்கம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியாக மாறி இருக்கிறது.

தற்போது விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இப்போது இருக்கிற இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அடிப்படை தேவை கூட இல்லாமல் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள். நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தது வரவேற்கப்படுகிறது. 

images/content-image/1706893935.jpg

தமிழ்நாட்டில் உள்ள திமுக அதிமுக இரண்டுமே ஊழல் மிகுந்த கட்சிகள் அதற்கு மாற்றாக விஜயின் கட்சி ஊழல் இல்லாமல் நேர்மையான முறையில் ஆட்சி நடத்துவார்களா என்பது சந்தேகத்துக்குரியதாக அமைந்துள்ளது.

ஊழல் இல்லாமல் நேர்மையாக ஆட்சி செய்தால் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அடிப்படைத் தேவை முதல் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வார்கள். நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய சொந்த பணத்தில் விஜயகாந்த் போல அல்லி அல்லி கொடுத்தவர் அல்ல.

images/content-image/1706893946.jpg

தமிழ்நாட்டில் விஜயகாந்த் அவர்கள் தான் உண்மையிலேயே ஊழல் இல்லாமல் தன்னுடைய சொந்த பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்த தலைவன்.

அதேபோல விஜய் அவர்கள் செய்யவில்லை இப்போது அரசியலுக்கு வருவதற்காக தான் உதவிகள் கொஞ்சம் செய்திருக்கிறார். எப்படி இருந்தாலும் ஊழல் இல்லாமல் நேர்மையான முறையில் ஆட்சி செய்தால் தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக வறுமையில் உள்ள மக்கள் தங்களுடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்.

images/content-image/1706893957.jpg

நேர்மையான ஊழல் இல்லாத ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டுமானால் விஜய் அவர்களால் என்பது என்னைப் பொருத்தமட்டில் சந்தேகம். 

என்னதான் இருந்தாலும் இவரை வாக்கு போட்டு தேர்வு செய்யப் போகின்றவர்கள் தமிழ்நாட்டு மக்கள் இவரை ஏற்றுக் கொள்கின்றார்கள் என்பது காலம்தான் பதில் சொல்லும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!