நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழையுடன் சுடிய வானிலை நிலவும்!

#SriLanka #weather #Rain #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழையுடன் சுடிய வானிலை நிலவும்!

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளைகளில் இன்று (04.02) மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன்படி கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல மழைக்காலங்கள் ஏற்படக்கூடும் என்றும், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்  பிற்பகல் வேளையில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 

இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4