உரிமை பெறாமல் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news #Case #vehicle
Thamilini
2 years ago
உரிமை பெறாமல் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை!

உரிமை பெறாமல் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.  

இந்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள  வாகனங்களில் 900,000 க்கும் அதிகமான வாகனங்கள் உரிய முறையில் சொந்தமாக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. 

 இந்த வாகனங்கள் தற்போது திறந்த அனுமதிப்பத்திரத்தின் கீழ் இயக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 கொழும்பு நகரில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை அடையாளம் காணும் கமரா அமைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்ட முன்னோடித் திட்டத்தில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதன்படி, வாகனங்களை விற்பனை செய்த பின்னர் உரிய முறையில் உரிமையை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4