தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களை சந்தித்த இந்திய துணை உயர்ஸ்தானிகர்!

#India #SriLanka #Batticaloa #sanakkiyan #IlankaThamilarasukKadsi
Mayoorikka
2 years ago
தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களை சந்தித்த இந்திய துணை உயர்ஸ்தானிகர்!

இந்திய துணை உயர்ஸ்தானிகர் டாக்டர். சத்யஞ்சல் பாண்டே இற்கும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில்லான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

 இதில் வட கிழக்கில் குறிப்பாக கிழக்கில் இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட இருக்கும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சனை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

 இதில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், த. கலையரசன், முன்னாள் மாநகர முதல்வர் தி. சரவணபவன், உட்பட மட்டக்களப்பு தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர், செயலாளர் மற்றும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4