நான்கு கோடி பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

#SriLanka #Arrest #Police #Negombo #Import #Ciggerette #illegal
Prasu
2 years ago
நான்கு கோடி பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

சுங்க வரி செலுத்தாமல் நான்கு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் . 

நீர்கொழும்பு பெரியமுல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாத்தாண்டிய மற்றும் கொச்சிக்கடை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. 

இவர்களிடமிருந்து நான்கு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகள் மற்றும் சிகரட்டுக்களை ஏற்றிச் சென்ற லொறியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

 இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4