ரஜனிகாந்தின் இரண்டாவது மகள் இயக்கும் புதிய படத்தில் ராகவா லோரன்ஸ் கீரோ

#Cinema #Actor #TamilCinema #Director #Film #daughter
ரஜனிகாந்தின் இரண்டாவது மகள் இயக்கும் புதிய படத்தில் ராகவா லோரன்ஸ் கீரோ

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 நடிகர் ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா, ‘லால் சலாம்’ படத்தை இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த் நாயகர்களாக நடிக்கும் இதில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

 ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படம் நாளை (பிப்.9) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. ரஜினி, தீபிகா படுகோன் நடித்த ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கி இருந்தார்.

images/content-image/1707400393.jpg 

அடுத்து தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கினார். இதில் தனுஷுடன் இந்தி நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், அவர் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும், படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என கூறப்படுகிறது. ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!