கம்பளையில் மரம் முறிந்து வீழ்ந்ததில் சிகிச்சைப் பெற்று வந்த குழந்தை உயிரிழப்பு!

#SriLanka #School #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கம்பளையில் மரம் முறிந்து வீழ்ந்ததில் சிகிச்சைப் பெற்று வந்த குழந்தை உயிரிழப்பு!

கம்பளையில் கடந்த திங்கட்கிழமை மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த நிலையில், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மற்றுமொரு குழந்தை இன்று (10.02) காலை உயிரிழந்துள்ளது. 

கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் ஐந்து வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இது தொடர்பிலான மேலதிக விசாரணை அட்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை சர்வதேச பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் காயமடைந்ததுடன், ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

ஏனைய இரண்டு பிள்ளைகளும் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4