வாடிவாசல் திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்

#Actor #TamilCinema #Director #Movie #Kollywood
Prasu
1 year ago
வாடிவாசல் திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்

சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப் படம் சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான ஐகானாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருந்தார் சூர்யா.

வெற்றிமாறனுக்காக காத்திருந்த சூர்யா விடுதலை 2 முடியவில்லை என்பதால் சுதா கொங்கராவுடன் இணைந்தார். அதன்படி தற்போது சூர்யா 43 ஷூட்டிங் தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

விஜய்யின் தளபதி 69 படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக இருந்தால், வாடிவாசல் படப்பிடிப்பு இப்போதைக்கு தொடங்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

இதனையடுத்து கால்ஷீட் பிரச்சினை காரணமாக வாடிவாசலில் இருந்து சூர்யா விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே சூர்யா பாலா கூட்டணியில் உருவாக இருந்த வணங்கான் படம் சில பல பிரச்சனையால் கைவிட்டுப் போக அவசர அவசரமாக கங்குவா படத்தில் கமிட்டானார்,

 தற்போது அதே போல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாடிவாசலும் கைவிட்டு போக சூர்யாவின் ரசிகர்கள் செம அப்செட் மூடில் உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!