இலங்கை வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

#SriLanka #weather #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கை வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்கு பிறகு பரவலாக மழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 

மத்திய மலையகத்தின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அவ்வப்போது காற்றானது 30-40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4