இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மரக்கறிகள்பழங்கள்: கோடிக்கணக்கில் ஒதுக்கப்பட்ட நிதி

#SriLanka #Fruits #prices #Vegetable #Import
Mayoorikka
2 years ago
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மரக்கறிகள்பழங்கள்: கோடிக்கணக்கில் ஒதுக்கப்பட்ட நிதி

கடந்த வருடத்தில் நாட்டிற்கு பழங்கள் மற்றும் மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்காக 13,000 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இறக்குமதி செலவினம் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, நாட்டிற்கு இறக்குமதி மரக்கறி வகைகளுக்காக 11,658 கோடி ரூபாவும், பழங்களுக்காக 1,308 கோடி ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது. அதேநேரம், கடந்த ஆண்டில் எரிபொருள் இறக்குமதிக்காகவே அதிகளவில் செலவிடப்பட்டுள்ளது.

 அதற்காக மாத்திரம் 153,924 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது வருடத்தின் மொத்த இறக்குமதி செலவினத்தில் 28 சதவீதமாகும் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 

இதுதவிர, மருந்து பொருட்களின் இறக்குமதிக்காக 21,778 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4