காங்கிரஸ் கட்சியானது தொடர்ந்து மோடியின் ஆட்சியை விமர்சித்து வருகிறது

#India #government #D K Modi
Mugunthan Mugunthan
2 months ago
காங்கிரஸ் கட்சியானது தொடர்ந்து மோடியின் ஆட்சியை விமர்சித்து வருகிறது

“ஒன்றிய அரசின் நலத்திட்டங்களால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக பலன் கிடைத்திருப்பதாக போற போக்கில் அப்பட்டமான பொய்யைச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார் பிரதமர் மோடி. தினமும் சொல்லும் பொய்களில் இதுவும் ஒன்று. 

பிற்படுத்தப்பட்ட, எஸ்சி, எஸ்டி பிரிவினரின் இட ஒதுக்கீட்டில் கை வைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக மோடி தலைமையிலான ஒன்றிய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் வங்கி பணிகளில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதே இதற்குச் சிறந்த சான்று. உயர் கல்வியிலும் பிற பிற்படுத்தப்பட்ட, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்தாமல் குறுக்கு வழியில் உயர் சாதியினர் பயன்பெற வழி ஏற்படுத்தித் தர மோடி அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.

 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்களும், தாழ்த்தப்பட்ட சமுதாய பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும் தான் மோடி ஆட்சியின் 10 ஆண்டு சாதனை. ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகி விடும்னு நினைக்கிறார் பிரதமர் மோடி” என்று தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் அறிக்கையில் சாடியுள்ளார்.