கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!
#India
#Tamilnews
#sri lanka tamil news
#Qatar
Dhushanthini K
1 year ago

மரண தண்டனை விதிக்கப்பட்ட 08 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளை விடுவிக்க கத்தார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
விடுவிக்கப்பட்ட பெற்ற 7 பேர் தற்போது இந்தியா வந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை சிறை தண்டனையாக மாற்றப்பட்டது.
குறித்த ஏழுபேரும்கத்தாரில் அமைந்துள்ள "தஹ்ரா குளோபல்" என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் என்ன குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர் அல்லது நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர் என்பதை கத்தாரோ அல்லது இந்தியாவோ தெளிவுபடுத்தவில்லை.
ஆனால் அவர்கள் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டிருந்தன.



