விவசாயிகள் மீண்டும் ஆர்பாட்டத்திற்கு செல்லவுள்ளதால் பிரானஸ் ஜனாதிபதி முதன்முறையாக சந்திப்பு
#France
#Meeting
#Protest
#President
#France Tamil News
#Farmers
Mugunthan Mugunthan
1 year ago

விவசாயிகள் தங்களது ஆர்ப்பாட்டத்தினை மீண்டும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ள நிலையில், முதன் முறையாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் விவசாய தொழிற்சங்கத்தினரை சந்திக்க உள்ளனர்.
இம்மாதம் 24 ஆம் திகதி சனிக்கிழமை சர்வதேச விவசாயக் கண்காட்சி (Salon International de l'Agriculture) ஆரம்பமாகிறது. இந்த கண்காட்சிக்கு முன்பாக ஜனாதிபதி அவர்களைச் சந்திப்பார் என எலிசே தகவல் வெளியிட்டுள்ளது.
விவசாயிகள் கூட்டமைப்பு, கிராமிய ஒருங்கிணைப்பு குழு உள்ளிட்ட பல அமைப்புகளுடன் ஜனாதிபதி மக்ரோன் வரும் நாட்களில் சந்தித்து உரையாட உள்ளார்.
அதேவேளை, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தங்களது உழவு இயந்திரங்கள் மூலம் மீண்டும் நாட்டை முடக்கும் போராட்டத்துக்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



