கனேடியத் தூதர் எரிக் வோல்ஸை சந்தித்தார் சிவஞானம் சிறிதரன்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கனேடியத் தூதர் எரிக் வோல்ஸை சந்தித்தார் சிவஞானம் சிறிதரன்!

இலங்கைக்கான கனேடியத் தூதர் எரிக் வோல்ஸை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று (13.02) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

கொழும்பிலுள்ள கனேடிய தூதர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

 இச்சந்திப்பில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், கனேடியத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் டானியல் வூட், அரசியல் அலுவலர் கணேசநாதன் சாகித்தியனன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். 

 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்துரைத்த தூதுவர், ஈழத்தமிழர்களின் அரசியல் நலன்சார்ந்து முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகளுக்கு தம்மாலான பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4