சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என எச்சரிக்கை!

#SriLanka #Health #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என எச்சரிக்கை!

தமது பிரச்சினை தொடர்பில் சுகாதார அமைச்சர் எழுத்துமூல அறிவிப்பை வெளியிடும் வரையில் பணிப்புறக்கணிப்பு தொடரும் என சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று (13) காலை 6.30 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்து தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4